அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன்

பொன்னேரியில் நடந்த அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பங்கேற்றார்.

Update: 2023-11-08 09:48 GMT

பொன்னேரியில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.

94 சதவீதபொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளதால் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வந்துள்ளது. ஓ.பி.எஸ். தரப்பினர் மேல் முறையீடு சென்றாலும் எடப்பாடியே வெற்றி பெறுவார். எந்த வழக்கிலும் ஓ.பி.எஸ். மேல் முறையீட்டில் வெற்றி பெறவில்லை ன பொன்னேரியில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் அளித்த பேட்டியில் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான பொன்னையன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் 94 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளதால் சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய இடைக்கால தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது என்றார். மேலும் ஓ.பி.எஸ். தரப்பினர் மேல் முறையீடு சென்றாலும் அதில் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெறுவார் எனவும் மேல் முறையீடு சென்ற எந்த வழக்கிலும் ஓ.பி.எஸ் .வெற்றி பெறவில்லை என தெரிவித்தார்.தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மட்டுமல்ல யார் முறையிட்டாலும், கடந்த காலத்தை போல தோற்று விடுவார்கள் என்றார்.

நாகாலாந்து மக்கள் குறித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்து குறித்த கேள்விக்கு அ.தி.மு.க. மட்டுமல்ல, இந்தியாவே கண்டிக்க வேண்டும், அவரை தண்டிக்க வேண்டும் எனவும், அவர் மீது வழக்கு தொடர்ந்து கூண்டில் நிறுத்த வேண்டும் என்றார். பா.ஜ.க - அ.தி.மு.க. கள்ள உறவு தொடர்பான முதலமைச்சரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு வாஜ்பாய் காலத்தில் தி.மு.க. பாஜகவுடன் கள்ள உறவு வைத்து காதலித்து திருமணம் செய்து பணம் கொழிக்கும் துறைகளை பெற்றது போல, தற்போது புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் 30000கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தி.மு.க. தற்போது பா.ஜ.க.வுடன் கள்ள உறவு வைத்து கொண்டு முடிந்தால் திருமணம் செய்து கொள்ள துடிப்பதாக சாடினார்.

மேலும் தேர்தலுக்கு 3மாதங்களுக்கு முன்பாக மட்டுமே கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியும் என்றார். நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த அற்புத நிர்வாகி எடப்பாடி பழனிசாமி பிரதமராக வேண்டும் என்ற நிலையில் இந்தியா இருப்பதாக கூறினார். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல, பொய்யை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகி விடும் என்ற தத்துவத்தை கருணாநிதி கடைபிடித்ததாகவும், அவரது மகன் ஸ்டாலின் கடைபிடிப்பதாகவும், ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு என தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி, சூழ்ச்சி செய்து வாங்கும் கையெழுத்து சட்டப்படி செல்லாது என்றார்.

கோபாலபுரம் குடும்பம் 30000 கோடி ரூபாய் கொள்ளை மைய அரசின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் எ.வ.வேலு மீதான நடவடிக்கை குறைவானதே என்றார். 30000கோடி கொள்ளை, நில மோசடி என பல்வேறு ஆதாரங்கள் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் அமறுவார் எனவும் பொன்னையன் தெரிவித்தார்.

Tags:    

Similar News