சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி பரணி விழா கொண்டாட்டம்

ஆடி பரணியை முன்னிட்டு இன்று சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் கள்ளங்கி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.;

Update: 2023-08-08 12:50 GMT

சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆடி பரணி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கள்ளங்கி கோலத்தில் கோவிலில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இக்கோவிலுக்கு சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மட்டுமல்லாது. புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தொடர்ந்து 6.செவ்வாய் கிழமை நாட்களில் இக்கோவிலுக்கு வந்து நெய் தீபம் ஏற்றியும், ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் கட்டியும், வீடு கட்ட செங்கற்களை அடுக்கி வைத்து வழிபாடு நடத்தினால் கோரிக்கை நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21.ஆம் தேதி ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இக்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாமல் வாரத்தில் 7. நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கி விட்டனர்.


இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு பால்,தயிர், சந்தனம், ஜவ்வாது,தேன், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தீப,தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

ஆடி பரணியை முன்னிட்டு இன்று மூலவர் கள்ளங்கி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை சந்தன காப்பு நடைபெற்றது. இத்தகைய பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினாலும். ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்கள் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூர அளவில்  ரூபாய் 50,100 ரூபாய் க்யூ வரிசையில் நின்று ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

மேலும் சாலை இருப்புறம் நடைபாதை வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து, பூமாலை, தேங்காய் கடை நடத்துவதால் பக்தர்கள் வந்து செல்லும் வாகனங்களும், அவ்வழியாக செல்லும் பேருந்துகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது மட்டுமல்லாமல் முதியோர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர். பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News