பொன்னேரி அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

பொன்னேரி அருகே அரசு பேருந்து மீது லாரி மோதியதால் விபத்து ஏற்பட்டது.

Update: 2023-10-17 14:49 GMT

விபத்தில் சிக்கிய அரசு பேருந்து.

பொன்னேரி அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.ஓட்டுநரின் சாதுரியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் இருந்து மாநகரப் பேருந்து சிறுவாபுரி நோக்கி சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சிவமணி இயக்கி கொண்டு அத்திப்பேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் நிறுவனத்தின் உள்ளே இருந்து லாரி ஒன்று பேருந்து வருவதை கவனிக்காமல் திடீரென சாலையை நோக்கி வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் சிவமணி சாதுரியமாக பேருந்தை வலப்புறமாக திருப்பி சாலையின் தடுப்பு கம்பியில் மோதி நிறுத்தினார்.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரின் சாதுரியத்தால் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News