கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆல்மைட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
பொன்னேரியில் கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆல்மைட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;
கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆல்மைட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பொன்னேரியில் கிறிஸ்துமஸை முன்னிட்டு ஆல்மைட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை. ஏராளமான கிறிஸ்துவ மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் உள்ள ஆல்மைட்டி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆராதனை நடைபெற்றது.கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.சமாதானத்தை வலியுறுத்தும் விதத்தில் விழாவில் பங்கேற்க வந்த கிறிஸ்தவ பெருமக்கள் தூய வெண்ணிற ஆடை அணிந்திருந்தனர்.
பாதிரியார் லாரன்ஸ் பிரபாகரன் விழாவின் துவக்கத்தில் ஏசுபிரானின் அவதரித்ததின் நோக்கத்தை நற்செய்தியாக எடுத்துரைத்தார்.இதனை தொடர்ந்து சபையில் திரண்டிருந்த கிறிஸ்தவ மக்கள் ஏசுவின் நாமத்தை போற்றி பாடல்களை பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சரியாக இரவு 12 மணிக்கு ஏசுபிரான் அவதரித்ததை நினைவு கூறும் விதத்தில் மேய்ப்பர்கள் வான சாஸ்திரிகள் புடைசூழ ஏசுபிரான் பூமியில் அவதரித்ததை விளக்கும் வகையில் வண்ண வண்ண உடையணிந்த சிறுமிகள் தத்ரூபமாக குழந்தை ஏசுவை உற்சாகத்துடன் கைகளில் ஏந்தி நின்றனர்.
இதனை தொடர்ந்து ஏசு அவதரித்ததை அங்கு கூடியிருந்தவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆடி பாடி வரவேற்றனர். நிகழ்வின் நிறைவாக உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது.இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.