பொன்னேரியில் நடுரோட்டில் அறுந்து விழுந்த மின்கம்பியால் பரபரப்பு
பொன்னேரியில் நடுரோட்டில் அறுந்து விழுந்த மின்கம்பியால் பரபரப்பு ஏற்பட்டது.;
அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பி.
பொன்னேரியில் நடுரோட்டில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக நாய்கள் தப்பின. மின்வாரிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்ங
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் அடங்கிய புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது பர்மா நகர்.இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பர்மா நகர் முதல் குறுக்கு தெருவின் சந்திப்பில் உள்ள மின்கம்பத்திலிருந்து உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து நடுரோட்டில் விழுந்தது.அந்த வழியே சென்ற ஒருவர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
மேலும் அங்கிருந்த சில இளைஞர்கள் அந்த வழியே பொதுமக்கள் யாரும் கடக்காமல் எச்சரிக்கை விடுத்தனர்.அவர்களின் எச்சரிக்கையை உணராத இரண்டு நாய்கள் அறுந்து விழுந்திருந்த மின்கம்பியை கடந்து ஓடின. அதிர்ஷ்டவசமாக அந்த நாய்கள் மின்கம்பியில் படாமல் உயிர் தப்பின.அங்கு வந்த ஒரு பசுமாட்டை மின்கம்பியை மிதிக்காமல் இளைஞர்கள் பார்த்து கொண்டனர்.
இளைஞர்களின் இந்த எச்சரிக்கை நடவடிக்கையால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. மேலும் கால்நடைகளும் செல்ல விடாமல் பார்த்துக்கொண்டனர். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் உயிரிப்பு ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.
மின்கம்பி அறுந்து விழுந்தது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ஒருமணி நேரமாகியும் யாரும் வராமல் அலட்சியம் காட்டியதாகவும் இதேபோல் ஏற்கனவே பலமுறை இதே இடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தும் இதனை சீரமைத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.