சாதியை ஒழிக்க வலியுறுத்தி தனி ஒருவனாக உண்ணாவிரதம் இருக்க முயன்றவர் கைது
பொன்னேரியில் சாதியை ஒழிக்க வலியுறுத்தி தனி ஒருவனாக உண்ணாவிரதம் இருக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரியில் சாதியை ஒழிக்க வலியுறுத்தி தனி ஒருவனாக உண்ணாவிரதம் இருக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். சாதியை ஒழித்து அனைவருக்கும் சமமான கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிட கோரி அவர் போராட்டம் நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்தவர் செல்லக்கிளி. இவர் சாதியை ஒழிக்க வலியுறுத்தி பதாகையுடன் பொன்னேரி பேருந்து நிலையம் எதிரே தனி ஒருவனாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார். சாதியை ஒழித்து அனைவருக்கும் கல்வி, வேலை, தேர்வு, அரசியல் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார்.
இதனிடையே உண்ணாவிரத போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த கூடாது என்பதால் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால் செல்லக்கிளியை கைது செய்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். சாதியை ஒழிக்க வலியுறுத்தி தனி ஒருவனாக உண்ணாவிரதம் மேற்கொண்ட நபரால் பரபரப்பு நிலவியது.