ஆரணி அருகே தனியார் நிறுவனத்தில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

ஆரணி அருகே தனியார் நிறுவனத்தில் பெயிண்ட் அடிக்கும்போது தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2023-04-23 01:15 GMT

வடமாநில தொழிலாளர் உயிரிழந்த தனியார் நிறுவனம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த வடக்கு நல்லூர் பகுதியில் பிரபல தனியார் பெயிண்ட் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் 500.க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அன்று உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மோனுகுமார்(28) என்பவர் உரிய பாதுகாப்பு கவசங்களின்றி தொழிற்சாலையின் உயரத்தில் உள்ள சுவற்றின் மீது பெயிண்ட் அடிக்கும் போது கால் தவறி கீழே நின்று கொண்டிருந்த சக ஊழியர் குணா என்பவர் மீது விழுந்துள்ளார்.

இதில் மோனுகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை சக ஊழியர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளர் மோனுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த மற்றொரு ஊழியர் குணா என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொழிற்சாலையில் பெயிண்ட் டேங்க் மீது வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது டேங்க் வெடித்து தமிழகத்தை சேர்ந்த இருவர் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News