உக்ரைனிலிருந்து பொன்னேரி வந்த மருத்துவ மாணவி: நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்பு
உக்ரைனிலிருந்து பொன்னேரி வந்த மருத்துவ மாணவிக்கு பெற்றோர் நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த ஜெகன்-நாகஜோதியின் மகளான ரித்திகா, உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 3-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு சிக்கி தவித்த மாணவி ரித்திக்கா, கடந்த 3நாட்களுக்கு முன் ரொமானியா வந்து அங்கிருந்து நேற்று இந்தியா வந்த மாணவி ரித்திகா நள்ளிரவில் சென்னை திரும்பினார்.
இவரை சென்னை விமான நிலையத்தில் அவரது பெற்றோர் வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தனர். சொந்த வீட்டுக்கு வந்த அவருக்கு ஆரத்தி எடுத்தும், இனிப்புகளை வழங்கியும் ஆரத்தழுவியும் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.