சிறுவாபுரி முருகன் கோவிலில் 86 நாட்களில் ரூ.70.73 லட்சம் உண்டியல் காணிக்கை
சிறுவாபுரி முருகன் கோவிலில் 86 நாட்களில் ரூ.70.73 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரூபாய் 1. கோடி மதிப்பீட்டில் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து நாள்தோறும் கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரத் தொடங்கி விட்டார்.
கோவிலில் குழந்தை பாக்கியம், வீடு கட்ட, ரியல் எஸ்டேட், திருமண தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி கோவில் சுற்றி வலம் வந்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருவதால் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
இந்நிலையில் 86.நாட்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ 70லட்சத்து 73ஆயிரம் ரூபாயும், தங்கம் 76கிராமும், வெள்ளி 8கிலோ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.