பொன்னேரி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 7-ம் ஆண்டு ஆடித் திருவிழா

Thiruvallur Temple- பொன்னேரி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 7 ஆண்டு ஆடித் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-08-01 05:00 GMT

பொன்னேரி அருகே பாடியநல்லூர்  ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஏழாம் ஆண்டு ஆடித்திருவிழா நடைபெற்றது. 

Thiruvallur Temple- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் ஏழாம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த புதன்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை அன்று காலை 7மணி அளவில் செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆலமரம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் தலையில் பால்குடம், சுமந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட. பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மதியம் 12. மணி அளவில் முன்னாள் கவுன்சிலர் ஜி.ராஜேந்திரன் சார்பாக ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அறுசுவை அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது .

பின்னர் மாலை 6மணிக்கு மேல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் மற்றும் சிறப்பு தூபதீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஆலய தலைவர் முன்னாள் கவுன்சிலர் கே.கே.எஸ்.பாஸ்கர், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சந்திரசேகர், துணைத் தலைவர்கள் முத்தையா, தினகர், லிங்கேஸ்வரன், துணைச் செயலாளர் எல்லையப்பன், செல்வம் , கணக்கு தணிக்கையாளர் சுடலைமணி, செல்வகுமார் மற்றும் பக்தர்கள் ,சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News