வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பதுக்கல்: 2 பேர் கைது
சோழவரத்தில் சிவந்தி ஆதித்தன் நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல்; இருவர் கைது.;
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சிவந்தி ஆதித்தனார் நகரில் உள்ள ஒரு வீட்டில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, சோழவரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார்பார்த்தபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக, சிராஜுதீன், ஜெயமுருகன் ஆகிய இருவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.