சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.54 லட்சம்

சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையா ரூ.54 லட்சம் வரப்பெற்றுள்ளது.

Update: 2023-03-02 02:00 GMT

சிறுவாபுரி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவில் இருந்தும் இருந்து வருவதால் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறுவாபுரி முருகன் கோவில் புனரமைக்கப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் நாள்தோறும் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

அண்மையில் தைப்பூசம் உள்ளிட்ட விஷேச நாட்களிலும் பக்தர்கள் பெருமளவில் வந்து முருகப் பெருமானை வணங்கி சென்றனர். இந்நிலையில் 70நாட்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி மேற்பார்வையிலும் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ 54லட்சத்து 40ஆயிரத்து 97ரூபாயும், தங்கம் 32கிராமும், வெள்ளி 3.4 கிலோ காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Tags:    

Similar News