மண் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கைது: ஜேசிபி, லாரிகள் பறிமுதல்

மீஞ்சூர் அருகே சீமாவரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அத்துமீறி மணல் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2024-09-01 05:15 GMT

படம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில் சவுடு மண் கொள்ளை நடப்பதாக எழுந்த புகாரையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மண் அள்ளும் இயந்திரத்தை கொண்டு மர்ம நபர்கள் சிலர் லாரிகளில் சவுடு மண் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து மீஞ்சூர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மணல் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட 2.லாரிகள்,ஜெ.சி.பி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு 5.பேர் கைது செய்தனர். இந்த மண் கொள்ளையில் ஈடுபட்ட கௌதம்,வினோத்குமார், பாபு,பாஸ்கர், மணிகண்டன் ஆகிய 5.பேரை கைது செய்த மீஞ்சூர் காவல்துறையினர் மணல் கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தெரிவிக்கையில், பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த திருநிலை, முள்ளவாயில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அத்துமீறி ஏரிகளில், கொசுத்தலை ஆற்றுப்பகுதிகளிலும் தொடர் மணல் கொள்ளையும் நடைபெற்றுவருகிறது. அண்மையில் பெரிய முள்ளவாயில் பகுதி ஏரியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்து லாரி, ஜேசிபி உள்ளிட்டவை பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் இதுபோன்ற மணல் கொள்ளைகள் ஈடுபட்டு வருவது தொடர்கதை ஆகியுள்ளது.

கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவதாகவும், இதற்குப் பின்னால் இருக்கின்ற முக்கிய புள்ளிகளை கைது செய்தால் மட்டுமே இதுபோன்ற மணல் கொள்ளை திருட்டுகள் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். எனவே மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News