வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 பேர் கைது

மீஞ்சூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை வழக்கில் மாமியார்,மாமனார், நாத்தனார் என 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-09-12 11:30 GMT

தற்கொலை செய்து கொண்ட ரேவதி.

மீஞ்சூர் அருகே வரதட்சணை கொடுமையால் இரண்டு மாதங்களுக்கு முன் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்த வழக்கில் மாமியார், மாமனார், நாத்தனார்கள் என 4பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் அண்ணா நகரை சேர்ந்த ஓட்டுநர் முத்தழகு ( வயது 30) என்பவர் தனது உறவினரா ரேவதியை ( வயது 26) கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6வயது மகளும், 4வயது மகனும் உள்ளனர். மாமியார் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ரேவதி கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ரேவதியை அவரது மாமியார், மாமனார், நாத்தனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி கொடுமை செய்து வந்ததாக ரேவதியின் தந்தை மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் தலைமையில் நடந்த விசாரணையில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியது உறுதியானது. இதனையடுத்து வழக்கின் பிரிவு தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 3பிரிவுகளாக மாற்றப்பட்டு மாமியார் சாந்தி (வயது 50), மாமனார் மாரி (வயது 56), நாத்தனார்கள் மாலா (வயது 31) கீதா (வயது 33) ஆகிய 4பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றதில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News