காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 பேர் கைது

Ganja Seized-ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர்.;

Update: 2022-09-19 02:30 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள்.

Ganja Seized-ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பெரிய அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில் துணை ஆணையர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர பதிவெண் கொண்ட இரண்டு கார்களை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததால் தீவர சோதனையிட்டதில் பண்டல் பண்டலாக கஞ்சா மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட 200கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த மாரிராஜ்பாபு, புஜாரிராஜ்பாபு, பட்டி பிரபாகர், குடாகிஷோர்குமார், அனுகுர்செரிவுமேஸ்குமார், அனுகுரிகொண்டபாபு, திப்புர ரமேஷ்பாபு ஆகிய 7பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சா யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News