கத்தியை காட்டி தங்க மோதிரங்கள், செல்போன் பறித்த இருவர் கைது
திருவள்ளூர் அருகே, இரவுப்பணி முடித்து வந்தவரை, கத்திமுனையில் மிரட்டி, இரண்டு தங்க மோதிரங்கள், செல்போன் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே கும்மனூரில், நேற்று இரவு பணி முடிந்து, தனியார் நிறுவன ஊழியர் மதன்குமார் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியே வந்த இருவர், மதன்குமாரை வழிமறித்து, கத்தியால் மிரட்டியுள்ளனர். கத்தியை காட்டி அவரிடம் இருந்த 2 மோதிரங்கள் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த மதன்குமார், சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அப்புராஜ், சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழிப்பறி போன்ற வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.