பொன்னேரியில் 18 ஆம் ஆண்டு மகளிர் தின விழா
பொன்னேரியில் தொண்டு நிறுவனம் சார்பில் 18ஆம் ஆண்டு மகளிர் தினவிழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மணலி புதுநகரில் சேவா கிராமப்புற வளர்ச்சி தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனம் சார்பில் 18ஆம் ஆண்டு மகளிர் தினவிழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
முதல் நிகழ்வாக பரதநாட்டிய மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காவல்துறை டிஐஜி ஆனி விஜயா விழாவில் பேசுகையில், ஒவ்வொரு பெண்ணும் வலிமையாக இருந்தால்தான் அந்த பெண் தனது குடும்பத்தையும் இந்த சமுதாயத்தையும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என குறிப்பிட்டார்.
நிகழ்வின் நிறைவாக ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இவ்விழாவில் பாலம் தொண்டு நிறுவன தலைவர் இருளப்பன், திரைப்பட நடிகை ஜெயந்தி மற்றும் பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.