ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 12.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 12.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2023-04-10 07:22 GMT

ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட மூவர்.

பொன்னேரி மீஞ்சூர் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 12.5கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக மூவர் கைது செய்யப்ட்டனர்.

சமீபத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயில், பேருந்து, கார் உள்ளிட்டவை மூலம் தொடர்ந்து கஞ்சாவை கடத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரியில் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டதில் அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 12.5கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து ஆட்டோவில் கொண்டு சென்று விற்க முயன்ற பாலமுருகன், ஆகாஷ், சந்திரசேகரன் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பாக தலைமறைவான தமிழரசன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சா உள்பட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுவது அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் கடத்தல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News