உட்கட்சி தகராறு விவகாரத்தில் நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு..!
உட்கட்சி தகராறு காரணமாக மாவட்டச் செயலாளர் உட்பட4 பேர் மீது சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சோழவரம் அருகே உட்கட்சி தகராறில் பாமக மாவட்ட செயலாளர் உட்பட 4பேர் மீது 2 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு.
பாமகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வரும் பிரகாஷ். சோழவரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி சோழவரம் அடுத்த ஜனப்பஞ்சத்திரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்திற்கு பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியிடம் பாமக பிரமுகர் முனுசாமி பேசி கொண்டிருந்தபோது உட்கட்சி தகராறில் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதில் மூக்கு தண்டுவடத்தில் காயமடைந்த முனுசாமி தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முனுசாமியை தாக்கியதாக அவரது மனைவி சசிகலா சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பாமக மாவட்ட செயலாளர் பிரகாஷ், டில்லி, சுதாகர், பிரசாத் ஆகிய 4பேர் மீது 2பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாமக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.