ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் சிறப்பு துப்புரவு முகாம்

ஊத்துக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது.;

Update: 2021-07-01 17:25 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டையில் உள்ள 15 வார்டுகளில் தினமும் 3 வார்டுகள் வீதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு துப்புரவு முகாம் இன்று முதல் துவங்கப்பட்டது. செயல் அலுவலர் மாலா மேற்பார்வையில் துப்புரவு முகாம் நடைபெற்று, துப்புரவு பணியாளர்கள் சாலைகளை சுத்தப்படுத்தியும் பிளீச்சிங் பவுடர் செலுத்தியும் சாலையை தூய்மைப்படுத்தியது காண்பவரை கவர்ந்தது.

Tags:    

Similar News