இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதல்: தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு

சோழவரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு.;

Update: 2021-06-30 18:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் சசிகுமார் இவருடைய மகன் ராஜ்குமார் (27). சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேனேஜராக பணியாற்றி வந்தார். நேற்று பணியை முடித்து விட்டு தனது இருசக்கர  வாகனத்தில் ஊத்துக்கோட்டை செல்வதற்காக சோழவரம் பைபாஸ் சாலை வளைவில் திரும்பும் போது பின்னால் வந்த அரியானா மாநில லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலைதடுமாறி ராஜ்குமார் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ்கர் (21) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜ்குமாருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News