பெரியபாளையம்: பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் போஸ்ட் மேன் பலி!

பெரியபாளையம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதல்; போஸ்ட் மேன் பலி.;

Update: 2021-06-23 14:48 GMT

பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி பேட்டைமேடு பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞரும்  போஸ்ட் மேன் ஆக பணிபுரிந்தவருமான வேல் (27) என்பவர் ஓட்டி வந்த பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ணன்கோட்டை பகுதியைச் சேர்ந்த திருப்பதி - ஜோதி தம்பதியரின் மகன் வேல் பொறியியல் பட்டதாரியான இவர், கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் போஸ்ட் மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர் இன்று காலை வேலைக்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்றார்.

பெரிய பாளையம் வெங்கல் நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே பேட்டைமேடு பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்து ரத்தவள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே வேல் பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News