
திருவள்ளூர் மாவட்டம் கும்மனூர் கிராமத்தில் பொன்னேரி தொகுதி வேட்பாளர் அவருடைய வாக்கை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனித்தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் துரை சந்திரசேகரன் அவருடைய சொந்த ஊரான கும்மனூர் கிராமத்தில் வாக்கு செலுத்தினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.