கைதிகள் இடமாற்றம்
திருவள்ளூர் மாவட்ட, மத்திய கிளை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இடநெருக்கடி கொரோனா, பரிசோதனைக்கு பின்னர் பலத்த பாதுகாப்போடு சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.;
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் அனைவரும் பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள மத்தியக் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் சிறைச்சாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உருவானதால், சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் அனைவரையும் சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்ற முடிவு செய்தனர். அதனடிப்படையில் முதல் கட்டமாக பொன்னேரி மத்திய கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகளுக்கு அரசு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
அதில் யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் கைதிகள் 60 பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்போடு மூன்று வாகனங்களில் சென்னை புழல் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதேபோன்று மற்ற கிளை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளும் அடுத்தடுத்து சிறை மாற்றம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறை மாற்ற நடவடிக்கையால் கைதிகள் தப்பி செல்ல முயலக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைச்சாலை முன்பாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் வரிசையாக நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்