அத்திப்பட்டு பகுதியில் பசுமாடுகள் திடீரென உயிரிழப்பு
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் பசுமாடுகள் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் கால்நடை துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக 2 மாடுகள் உயிரிழந்த நிலையில், கால்நடை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம். பால் வியாபாரம் செய்து வரும் இவருக்கு சொந்தமான 20 பசு மாடுகளில், கடந்த 2 நாட்களில் 2 பசு மாடுகள் திடீரென உயிரிழந்தன. இன்று 4 மாடுகள் நிற்கமுடியாமல் கீழே விழுந்ததை கண்ட அவர், இது குறித்து கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் கால்நடைத்துறை அதிகாரிகள் மாடுகளை சோதனையிட்டு அதனை நிறுத்தி வைக்கும் போது மாடுகள் நிற்காமல் கீழே விழுந்தன.
இதனையடுத்து, பசு மாடுகளுக்கு கால்நடைத்துறை அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொற்று நோய் ஏற்படவில்லை என்றும், மாடுகளுக்கு கால்களில் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.