திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.;

Update: 2024-09-17 08:30 GMT

கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியார் தலையில் கலசத்திற்கு ஊற்ற புனித நீர் சுமந்து வந்த போது.

கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் இக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன

அதனைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி பந்தத்தால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் சிவாச்சாரியார்கள் கொண்ட குழுவினர் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், கோ பூஜையுடன் தொடங்கி முதல் காலையாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் காலையாக பூஜை நான்காம் காலையாக உள்ளிட்ட பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்றது.

பின்னர் மகாபூர்ணாஹூதிதி முடிவடைந்து கலசங்களில் பல்வேறு புண்ணிய நதிகள் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரர்கள் வேத மந்திரங்கள் முழங்க தலையில் சுமந்து கோவில் சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை வெகு விமர்சையாக நடத்தி வைத்தனர்.

அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி பரவசத்துடன் விண்ணை பிளக்கும் விதமாக முழக்கமிட்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட சுற்றுவட்டார பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் குடும்பத்தினர் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆனந்த் குமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சிவக்குமார், கவுன்சிலர் ஜோதி. ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கல்விச்செல்வம், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம மக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News