பழைய குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்டித் தரப்படுமா

பெரியபாளையம் அருகே ஆமிதா நெல்லூர் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தேக்க மேல்நிலைத் தொட்டியை அகற்ற வேண்டும்

Update: 2022-09-11 07:15 GMT

பெரியபாளையம் அருகே ஆமிதா நெல்லூர் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தேக்க மேல்நிலைத் தொட்டி அகற்றி புதிய தொட்டி கட்டி தர பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த ஆமிதா நெல்லூர் ஊராட்சியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் கிராமத்தில் உள்ள வருவாய் துறை கட்டிடம் அருகே கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை பூர்த்தி செய்வதற்காக கடந்த 2013-14 ஆம் ஆண்டு சுமார் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு இங்கிருந்து பைப்புகள் மூலம் கிராமத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு குடி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இத்தொட்டியின் மேற்கூரை மேல் தளத்திலும் தூண்களில் விரிசல் ஏற்பட்டு கான்கிரீட் பூசுகள் உதிர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி காட்சி அளிக்கிறது எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழும் அபாயம் உருவாகியுள்ளது. அபாயத்தை உருவாக்குவதற்கு முன்பே இந்த பழைய குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டியை அமைத்து தர வேண்டுமென ஆமிதா நெல்லூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News