திருவள்ளூர் அருகே மதுரவாசல் கிராமத்தில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள்

Welfare Schemes in Tamil Nadu -திருவள்ளூர் அருகே மதுரவாசல் கிராமத்தில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் வழங்கினார்.;

Update: 2022-08-19 00:58 GMT

திருவள்ளூர் அருகே மதுரவாசல் கிராமத்தில் நலதிட்டஉதவிகளை சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் வழங்கினார்.

Welfare Schemes in Tamil Nadu -திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மதுரவாசல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் மகாபாரதி தலைமை வகித்தார். ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ்,எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பி.ஜே.மூர்த்தி,ஆ.சத்தியவேலு,ஊராட்சி மன்ற தலைவர் கீதா கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம் எல் ஏ டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு 7 பயனாளிகளுக்கு பட்டா நகல்,3 பயனாளிகளுக்கு இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று,50 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை,12 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சான்று,165 பயனாளிகளுக்கு இருளர் பழங்குடியினர் நலவாரிய அட்டை,30 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை,10 பயனாளிகளுக்கு வேளாண்மை துறை சார்பாக உயிர் உரம்,ஆறு பயனாளிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பாக கத்தரி விதை என மொத்தம் 283 பயனாளிகளுக்கு ₹.17 லட்சத்து 76 ஆயிரத்து 980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய்த்துறை,வட்ட வழங்கல் துறை, வேளாண்மை துறை, சுகாதாரத் துறை, அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும்,கட்சியின் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக அனைவரையும் தனி வட்டாட்சியர் லதா,துணை வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் ஏ. வி. ராமமூர்த்தி, வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, கன்னிகை ஜி.ஸ்டாலின், டி.கே. முனிவேல், ஹாலிவுட் பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில்,வட்ட வழங்கல் அலுவலர் ரவி நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News