ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் 109 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ வழங்கல்

ஊத்துக்கோட்டை ஜமாபந்தி நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினார்.

Update: 2022-06-17 06:30 GMT

ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் 109 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை ஜமாபந்தியில் 730 மனுக்கள் குவிந்தன. உடனடி தீர்வாக 109 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1431 பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 7ந் தேதி அன்று தொடங்கி வியாழக்கிழமை நேற்று மாலை நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான ஜோதி தலைமை வகித்தார். ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ் வரவேற்றார்,தனி வட்டாட்சியர் லதா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கந்தசாமி, மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாலை 5 மணியளவில் நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் 7ந் தேதி முதல் இதுவரை முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம் வாரிசு சான்று என மொத்தம் 730 மனுக்கள் வந்தது. இதில் 109.மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 621.மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ்,வட்ட தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் பிரகாசம், பொருளாளர் ராஜி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், விஏஒக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News