மாதர்பாக்கத்தில் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Karunanidhi Memorial- மாதர் பக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு நலத்திட்டங்களை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் வழங்கினார்.;

Update: 2022-08-08 02:30 GMT

மாதர் பக்கத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு நலத்திட்டங்களை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் வழங்கினார்.

Karunanidhi Memorial- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மாதர்பாக்கம் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜே.மோகன் பாபு ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு 54 மகளிர் சூழ உதவி குழுக்களை சேர்ந்த 700 பெண்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் ,முரளி மற்றும் மதர்பாக்கம் இளைஞர் அணியை சார்ந்த பாஸ்கர், எஸ்வந்த் குமார், ஆர்கிடெக்ட் மணி, கார்த்திக், லோகேஷ் மற்றும் மணி உட்பட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News