புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று களை நடவு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் ஊராட்சியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடவு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்;

Update: 2022-09-27 02:15 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடுவதற்கான பணிகளை ஊராட்சி மேற்கொண்டு வருகின்றது.

இதற்காக புறம்போக்கு நிலத்தில் புதர்மண்டி கிடக்கும் செடி, கொடிகளை இயந்திரங்களின் உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்தினர். மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை சீர்படுத்தி மரக்கன்றுகளை நடுவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் மேய்ச்சல் பாதிக்கும் எனவும், கூலி தொழிலை மட்டுமே நம்பியுள்ள தங்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மரக்கன்று நாடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி இயந்திரங்களை திருப்பி அனுப்பினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

Similar News