ஆரணி ஆற்றின் இடையே மேம்பாலம் கட்டித் தர கிராம மக்கள் கோரிக்கை

பெரியபாளையம அருகே சேதமடைந்து கிடக்கும் புதுப்பாளையம் தரை பாலத்தை, மேம்பாலமாக அமைக்க அரசுக்கு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-12-25 04:11 GMT

புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கிவிட்டதால், ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடக்கும் மக்கள். 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மங்களம், ஆத்துமேடு, புதுப்பாளையம், காரணி, எருக்குவாய் உள்ளிட்ட 15.க்கு மேற்பட்ட - மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 30.ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் இவர்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர் புதுப்பாளையம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக பெரியபாளையம்.ஆரணி சென்று அங்கிருந்து சென்னை.கும்மிடிபூண்டி, கவரைபேட்டை , பொன்னேரி திருவள்ளூர்,பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் ,வேலை, வியாபாரம். கல்வி ஆகியவற்றிற்கு சென்று வருவார்கள்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாத பருவ மழை காரணத்தினால் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி நிரம்பி தண்ணீர் ஆரணி ஆற்றில் திறக்கப்பட்டதால் அந்த தண்ணீர் வெள்ளப்பெருக்காக மாறி நாகலாபுரம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் வழியாக ஆரணி, பொன்னேரிக்கு சென்று பழவேற்காடு கடலில் உள்ள வங்ககடலில் சென்று சேரும்.

 அவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் புதுப்பாளையம் தரைப்பாலம் மூழ்கிவிட்டது. இதனால் 15. கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு பெரியபாளையம் சென்று அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.  சிலர் ஆபத்தை உணராமல் சுற்றி வர நேரம் ஆவது காரணத்தினால் தண்ணீரில் இறங்கி கரையை கடக்கின்றனர். மேலும், இங்குள்ள கிராமப் பகுதிகளில் அதிகமாக காய் கனி பூக்கள் உள்ளிட்டவை பயிரிட்டு வருகின்றனர். அறுவடை செய்யும் பயிர்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல 10 கிலோமீட்டர் சுற்றி வருவதால் நேரத்திற்கு பேருந்து கிடைக்காமல் நேரம் ஆகி விடுகிறது.

இதனால் வியாபாரம் பாதிப்பதாகவும்,  விளைவிக்கும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வில்லை என்றும்  அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆரணி ஆற்றை கடந்துதான் சென்று வருகின்றோம். மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு கூட அனுப்ப முடியாமல் நாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை நேரத்திற்கு கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தினால் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றோம். இந்த தரைப் பாலத்தை மாற்றி மேம்பாலம் ஆக கட்டித்தர பல சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும், தகுந்த அதிகாரிகளை நேரில் சென்று முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை என்றும் சுமார் முப்பது ஆண்டுகாலமாக இதே நிலைமை என்று வேதனை தெரிவித்தனர். தற்போதைய பொறுப்பேற்று உள்ள அரசாவது எங்கள் மீது அக்கறை செலுத்தி புதுப்பாளையம் கிராமத்திற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள சேதமடைந்த பழைய தரைப்பாலத்தை அகற்றி விட்டு, இந்த முறையாவது புதிதாக மேம்பாலம் கட்டித் தரவேண்டும்  என 15.கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News