விஜயதசமி முன்னிட்டு குழந்தைகள் ஏடு தொடங்கும் விழா
விஜயதசமி முன்னிட்டு சரஸ்வதி தேவி ஆலயத்தில் பாஜக ஊடக பிரிவு சார்பில் குழந்தைகள் ஏடு தொடங்கும் விழா
விஜயதசமியை முன்னிட்டு பாஜக ஊடக பிரிவு சார்பில் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அரியபாக்கம் கிராமத்தில் உள்ள வித்யா ரொம்ப ஞான சரஸ்வதி தேவி ஆலயத்தில் குழந்தைகள் ஏடு தொடங்கும் விழா. மாநில ஊடக பிரிவு தலைவர் ஸ்ரீ ரங்கா துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், நிறைவு நாளான இன்று கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்கும் வகையில் விஜயதசமி அனுசரிக்கப்பட்டு வருகிறது. விஜயதசமி நாளில் கல்வி, இசை, நடனம், பிற மொழி என கல்வி சார்ந்த புதியவற்றை தொடங்குவது மரபாக உள்ளது.
புதிய தொழில்கள் தொடங்குவது, பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க, இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்கவும் உகந்த நாள் இந்தத் தினம். பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்று தான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாகக் கொண்டாடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அரியப்பாக்கம் பகுதியில் ஸ்ரீ வித்யாரம்ப ஞான சரஸ்வதி ஆலயம் அமைந்துள்ளது. விஜயதசமியான இன்று இந்த ஆலயத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக ஊடக பிரிவு சார்பில் குழந்தைகள் ஏடு துவங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வை அக்கட்சியின் மாநில ஊடக பிரிவு தலைவர் ஸ்ரீ ரங்கா துவக்கி வைத்து குழந்தைகளுக்கு நோட்டு, எழுதுகோல் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியை முன்னிட்டு காலை ஆலயத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளை பெற்றோர்கள் ஆலயத்திற்கு வந்து பூஜையில் கலந்துகொண்டு தங்கள் பிள்ளைகளுடன் கருப்பு பலகை, பல்பம், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து தாயார் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.
பின்னர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சரஸ்வதி தாயார் சன்னதி முன்பு அரசியில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சியான தமிழில் அ, ஆ என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் தொடங்கி வைத்தனர். இதில் பாஜக மாவட்ட ஊடக பிரிவு தலைவர் புருஷோத்தமன், மாவட்டத் தலைவர் சரவணன், மற்றும் ஊடக பிரிவு நிர்வாகிகள் ரமேஷ், அசோக்குமார், சசிக்குமார், நித்யானந்தம், நாராயணமூர்த்தி, ஜெகதீஷ், உத்தரபாண்டி, முத்து, விநாயகம், லோகேஸ்வரராவ், ஒன்றிய தலைவர் சேகர், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.