ஈகுவார்பாளையத்தில் கால்நடை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா
ஈகுவார்பாளையத்தில், ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.;
கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் 1311 சதுர அடி பரப்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டு, இதற்கான பூமி பூஜை ஈகுவார் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பி.ஸ்ரீதர், உதவி செயற்பொறியாளர் புண்ணியகோடி, இளநிலை பொறியாளர் அசோக் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று கால்நடை மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைத்து, கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டப்படும் திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, குறித்த நாட்களுக்குள் இந்த மருத்துவமனையை சிறப்பாக கட்டித்தர கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், திமுக நிர்வாகி ராகவரெட்டிமேடு ரமேஷ், ஈகுவார் பாளையம் ஊராட்சி செயலாளர் லக்ஷ்மி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.