அக்கர பாக்கம் ஊராட்சியில் கால்நடை விழிப்புணர்வு முகாம்

அக்கர பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-11 15:15 GMT

அக்கர பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அக்கர பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை உதவி மருத்துவர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது கால்நடை ஆய்வாளர்கள் சுப்பிரமணியம் சண்முக ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழன் கலந்துகொண்டு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இம்முகாமில்.212, பசு மாடுகள்.305, ஆடுகள் கோழி மற்றும் நாய்கள் உள்ளிட்டவை க்கு மலட்டுத்தன்மை நீக்கம், சினைப் பரிசோதனை செயற்கை முறை கருவூட்டல்.குடற்புழு. நீக்கம். உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் வழங்கினார் பின்னர் சிறப்பான முறையில் கால்நடைகளை பராமரிக்கும் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் கால்நடை உதவியாளர் வினிதா ஷீபா நன்றி கூறினார்



Tags:    

Similar News