ஊத்துக்கோட்டை: ஆறு வழிச்சாலை ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
Farmer Meeting Today -ஊத்துக்கோட்டையில் ஆறு வழிச்சாலை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
Farmer Meeting Today - இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரையில் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள 34 கிராமங்கள் வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில் 1238 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊத்துக்கோட்டையில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடனான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆறு வழி சாலை திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்க மறுத்த நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தையை புறக்கணித்த விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சாலை பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை ஆணையத்தை கண்டித்து முழக்கங்களை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 6வழி சாலை திட்டத்தை விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2