கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 6.கிலோ கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரிடம் இருந்து 6கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரது உடைமைகளை சோதனை மேற்கொண்டதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 6கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடப்பாவை சேர்ந்த வெங்கடேசலு ( வயது 50), திருவொற்றியூரை சேர்ந்த ஸ்ரீதர் ( வயது 53) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா எல்லை அருகாமையில் உள்ளதால் இது போன்று கஞ்சா, போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், போலீசார் அவ்வப்போது இதுபோன்ற போதைப் பொருட்கள் கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த போதைப் பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்து மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இதுபோன்ற சம்பவங்களி்ல் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் கடத்தல் சம்பவங்கள் குறையும் என்றனர்.