எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் நூதன போராட்டம்

ஆந்திரா-தமிழகம் எல்லை எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2023-12-25 13:52 GMT

எளாவூர் சோதனைச்சாவடி.

கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழ்நாடு - ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி நூதன போராட்டம் நடத்தினர். ஆவணங்கள் இருந்தும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டித்தும், சோதனைச்சாவடி என்ற பெயரில் மாமூல் வேட்டை நடத்துவதற்கு அப்போது அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக வட மாநிலங்களுக்கும், வட மாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக சென்னைக்கும் இந்த சோதனைச் சாவடி வழியாக பல்வேறு வகையிலான சரக்குகளை ஏற்றி கொண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.


இந்த சோதனைச் சாவடியில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சோதனைச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டித்தும், சோதனைச்சாவடி என்ற பெயரில் மாமூல் வேட்டை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி உத்தரவிட்டும் மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை அகற்றிடாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். லாரி ஓட்டுனரிடம் மாமூல் வசூலிக்கும் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இனியும் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அப்போது கூறினார்கள்.
Tags:    

Similar News