திருவள்ளூரில் திருநங்கைகளுக்கு பயிற்சி: தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம்

திருவள்ளூரில், திருநங்கைகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக, தனியார் கல்லூரியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Update: 2022-03-16 03:00 GMT

திருநங்கைகள் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தம், டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியுடன் கையெழுத்தானது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருநங்கைகள் தங்களது படிப்ப பாதியில் நிறுத்தியவர்கள் அணுகி,  அவர்களுக்கு  திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி,  கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் கல்லூரியான டி ஜே எஸ் கல்லூ ரியுடன் குறுகிய கால ஒப்பந்தம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு கல்வி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க, ஒப்பந்தம் வழிவகை ஏற்பட்டுள்ளது. 

டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் போது, கல்லூரி பயிற்றுத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் இயக்குனர் கபிலன், கல்லூரி முதல்வர் டாக்டர் பிரகாஷ், கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தலைவர் கீதா, திருநங்கை உரிமை சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜீவா,திருநங்கை உரிமை சங்க த்தின் ஒருங்கிணைப்பாளர்மானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News