கும்மிடிப்பூண்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-18 04:15 GMT

கும்மிடிப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் கந்து வட்டி கொடுமையிலிருந்து சாலையோர வியாபாரிகள் விடுபட, கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்திட அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் 2014 குறித்து அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும், இலவச தள்ளு வண்டிகளை முறைகேடுகள் இன்றி வழங்க வேண்டும், கந்து வட்டி கொடுமையிலிருந்து சாலையோர வியாபாரிகள் விடுபட, கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.15 ஆயிரம் என தேர்தல் வாக்குறுதியை அமலாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி பகுதி தலைவர் வி.ஜோசப் தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு மாநில செயலாளர் சி.திருவேட்டை, வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வி.குப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், கட்டுமான சங்கத்தின் பகுதி செயலாளர் எம்.சி.சீனு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Tags:    

Similar News