கும்மிடிப்பூண்டி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரின் டூவீலர் திருட்டு

கும்மிடிப்பூண்டி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரின் டூவீலர் திருட்டு போன காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.;

Update: 2022-08-14 07:15 GMT

சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த டூ வீலர் திருடப்பட்ட காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் கும்மிடிபூண்டி பேரூராட்சி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாண்டில்யன் (28) .இவர் சிப்காட் தொழில் பேட்டையில் சதன் ஆட்டோ காஸ்டிங் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் பணிக்கு சென்ற சாண்டில்யன் சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள மற்றொரு தொழிற்சாலைக்கு எலக்ட்ரிக்கல் பழுது பார்ப்பதற்காக இரவு 11 மணி அளவில் தொழிற்சாலை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று இருந்தார்.தொடர்ந்து அரை மணி நேரம் கழித்து வேலை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து சாண்டிலியன் செக்யூரிட்டி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு 2 வாலிபர்கள் அதில் ஒருவர் இருசக்கர வாகனத்தின் போர்க் லாக் உடைத்து விட்டு சென்று சிறிது நேரத்திற்கு பிறகு இரு சக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் வந்து அதில் ஒரு இளைஞர் போர்க்லாக் உடைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் சி.சி.டி.வி.காட்சிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் மேற்கண்ட சி.சி.டி.வி. காட்சிகளை காண்பித்து இருசக்கர வாகனம் மற்றும் மர்ம நபர்களை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

Tags:    

Similar News