ஐ.நா. சபையில் ஒலித்தது கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல்

கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலரின் குரல் ஐ.நா. சபையில் ஒலித்ததற்காக சொந்த ஊரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-03-27 06:35 GMT

ஐ.நா. சபையில் பேசிவிட்டு வந்த கும்மிடிப்பூண்டி சமூக ஆர்வலருக்கு சொந்த ஊரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எல். ராஜேஷ். இவர் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையில் உரையாற்றி விட்டு கும்மிடிப்பூண்டி திரும்பி உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் எம்.எல்.ராஜேஷ். இவர் காந்தி உலக மையம் என்கிற அமைப்பை நிறுவி காந்திய கொள்கைகளை பரப்பி வருவதோடு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும், உலக சாதனை நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் 52வது கூட்டத் தொடரில் மன மாசு தான் அனைத்து மாசுபாட்டிற்கும் மூல காரணம் என்கிற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் அவர் பேசுகையில் இன்று உலகம் எதிர்கொள்ளும் மிக ஆபத்தான பிரச்சினைகளில் ஒன்று மாசுபாடு. அனைத்து வகையான மாசுபாட்டிற்கும் அடிப்படைக் காரணம் மாசுபட்ட மனதின் வெளிப்பாடே. அசுத்தமான மனம் சுயநலத்தையும் அசுத்தத்தையும் வெளிப்படுத்துகிறது. அதேசமயம், சுத்தமான மற்றும் தூய்மையான மனம் அமைதியையும் அன்பையும் உருவாக்கும் என பல்வேறு கருத்துக்களை ஐநா சபையில் பேசினார்

அப்போது தமிழில் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்" என்று ஒரு தமிழ் பழமொழி உள்ளது, அதாவது "எண்ணம் அழகாகஇருந்தால், எல்லாம் அழகாக இருக்கும்". என ஐநா சபையில் பேசியது வரவேற்பு பெற்றது.

ஐநா சபையில் பேசி முடித்து விட்டு கும்மிடிப்பூண்டி வந்த காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷை காந்தி உலகமையத்தை சேர்ந்தவர்களும், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், சமூக சேவகரும் தொழிலதிபருமான கிளமெண்ட், உள்ளிட்டோர் மேள தாளத்தோடும், மயிலாட்டத்தோடும் அவரை வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

ஐ.நா. சபை வரை சென்று பேசி கும்மிடிப்பூண்டி வந்த எம்.எல்.ராஜேஷிற்கு கும்மிடிப்பூண்டியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்

Tags:    

Similar News