தேசிய கல்வி கொள்கை புரட்சிகரமானது: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

1960, 1980களில் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையினை மறு வரையறை செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

Update: 2022-11-27 04:15 GMT

 எளாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் சார்பில் கட்டப்பட உள்ள பள்ளிக்கு அடிக்கல் நாட்டி வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எளாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் சார்பில் பள்ளி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று குத்து விளக்கேற்றி அடிக்கல் நாட்டி வைத்தார்.

பின்னர்  ஆளுநர் ரவி  பேசியது: தேசிய கல்வி கொள்கை 2020 என்பது ஒரு புரட்சிகர ஆவணம் ஆகும்.   1960, 1980களில் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையினை மறு வரையறை செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம்  இருக்கிறோம்.. கல்வி என்பது மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். அது தரமான கல்வியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது. வருங்காலத்தில் அனைத்து சவால்களையும் எதிர் கொள்ளும் வகையில் மாணவர்கள் அனைத்து வகைகளிலும்  தரமான கல்வியினை பெற வேண்டும் .

நாகாலாந்தில் ஆளுநராக பணியாற்றிய காலத்தில் 100வயதை கடந்தும் பலர்  அங்கு ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.   தான் உயர் கல்வி பயிலும் வரையில் பள்ளிக்கு செல்ல 8கிமீ நடந்து சென்று படித்தேன். சரியான சாலை வசதி இல்லாத நிலையில் மழை காலங்களில் 4மாதங்கள் வரை முழங்கால் அளவு தண்ணீரில் காலணிகளை கையில் சுமந்து பள்ளிக்கு சென்றேன். மேலும் பயின்ற காலத்தில் மின்சார வசதி இல்லாததால்  மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் படித்தேன் என்றார்  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி..




Tags:    

Similar News