ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழுவினர் 4 ஊராட்சிகளில் ஆய்வு

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழுவினர் 4 ஊராட்சிகளில் ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-20 07:56 GMT

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

எல்லாபுரம் ஒன்றியத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய சிறப்பு குழுவினர் 4 ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆலப்பாக்கம், அக்கரபாக்கம், மாம்பள்ளம், 43 பனப்பாக்கம், உள்ளிட்ட 4. ஊராட்சிகளில் மத்திய அரசின்ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மத்திய அரசின் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் சஞ்சீவ்குமார் சட்டா, சிரந்சிங் சைக்கியா, ஆகியோர் தலைமையில் மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இத்திட்டத்தின் வாயிலாக அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கபட்டுள்ளதா என்றும், குடிநீரின் தன்மை, மற்றும் மாதம் தோறும் குடிநீர் ஆய்வு செய்து மக்களுக்கு சுத்தம் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா என்பது உள்ளிட்டவை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

மேலும் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் குழுவினர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் இக்குழுவினர் விளக்கங்கள் கேட்டறிந்தனர்.

அப்போது அவர்கள் தண்ணீரின் காரத்தன்மை, கடினத்தன்மை, குளோரைடு, உள்ளிட்ட 13-வகையான ஆய்வுகள் மேற்கொண்டனர். பின்னர் இக்குழுவினர் அப்பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கி உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று சீராக தண்ணீர் வருகிறதா தண்ணீரை குடித்து பார்த்து ஆய்வு செய்து, குறைகள் ஏதும் உள்ளதா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது எல்லாபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், எல்லாபுரம் வட்டார பொறியாளர் நரசிம்மன், அக்கரபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் அரசன், துணைத் தலைவர் நளினி, ஊராட்சி செயலாளர் ரமேஷ், ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ஆறுமுகம், துணைத் தலைவர் செல்வம், மாம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News