இரட்டை இலை சின்னத்தை பா.ஜ.க. முடக்கிவிடும்- நாஞ்சில் சம்பத் சொல்கிறார்

இரட்டை இலை சின்னத்தை பா.ஜ.க. முடக்கிவிடும்- என நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறினார்.;

Update: 2022-06-29 03:00 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் நாஞ்சில் சம்பத்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் திராவிட கொள்கை பற்றாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு திராவிடம் குறித்து எடுத்துரைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் டெல்லி எஜமானர்கள் அனுமதியோடு அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார் எனவும் பி.ஜே.பி. மாநில கட்சிகளை வாழ விட்டதாக வரலாறு இல்லை எனவும் இதற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகியுள்ளதாக தெரிவித்தார். பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த பணத்தில் பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றார். ஓ.பிஎ.ஸ், ஈ.பி.எஸ். இருவரையும் கொம்பு சீவி கட்சியை உடைக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், அழிந்து வரும் அ.தி.மு.க.வை ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். இருவராலும் காப்பாற்ற முடியாது என்றார். அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சினை தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது குறித்த கேள்விக்கு இரட்டை இலை சின்னத்தை முடக்குவது தான் பி.ஜே.பி.யின் லட்சியம் எனவும் இரட்டை இலை சின்னத்தை முடக்கி அங்கே பா.ஜ.க. அமர முயற்சிக்கிறது என்றார். ஆனால் எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வர விட மாட்டோம் என நாஞ்சில் சம்பத் தனக்கே உரிய பாணியில் உவமையை சுட்டிக்காட்டி உறுதியாக தெரிவித்தார்.

Tags:    

Similar News