கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.;
கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் காற்றாலை உற்பத்தி தொழிற்சாலையில் உள்ளது.
இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.