மாநில அளவிலான ரக்பி போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
State Level Ragfi Competition கவரப்பேட்டையில் மாநில அளவிலான ரக்பி போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
State Level Ragfi Competition
கவரைப்பேட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான ரக்பி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோலார்பேட்டை அணியும், பெண்கள் பிரிவில் சென்னை அணியும் கோப்பையை தட்டி சென்றன.
State Level Ragfi Competition
மாநில அளவிலான ரக்பி போட்டியில் கோப்பை வென்ற அணிகள்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ரக்பி புட்பால் யூனியன் சார்பில் மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. 14 வயதுக்கு உட்பட்ட சப் ஜூனியர்களுக்கான போட்டியில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 ஆண்கள் அணியும், 14 பெண்கள் அணியும் மோதின. லீக், நாக் அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் இறுதி போட்டியில் ஜோலார்பேட்டை - நாகப்பட்டனம் அணிகள் மோதின. இதில் ஜோலார்பேட்டை அணி 15 - 5 என்ற கணக்கில் நாகப்பட்டனம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதே போல பெண்கள் பிரிவில் சென்னை - திருவள்ளூர் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 10 - 5 என்ற கணக்கில் திருவள்ளூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கல்லூரி செயலாளர் இளமஞ்சி பிரதீப் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழையும், பரிசுக் கோப்பையும் வழங்கி பாராட்டினார்.
மேலும் சிறந்த வீரர்களுக்கு இதில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த அணிகளில் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு ரக்பி புட்பால் யூனியன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.