ஸ்ரீராமநவமி முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள்
ஸ்ரீராமநவமி முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவில். இக்கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, இன்று அதிகாலை ஆறு மணி அளவில் காகட ஆரத்தி தொடர்ந்து 8 மணி அளவில் ஆலய வளாகத்தில் மகா கணபதி ஹோமம்,ஆயுள் ஹோமம், ராம தாரக ஹோமம், உள்ளிட்ட யாகசாலை ஹோமங்கள் நடைபெற்றது
இதன் பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்தனர். இதனையடுத்து சீரடிசாய்பாபா விருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
பிற்பகல் 12 மணியளவில் சிறப்பு மதிய ஆரத்தி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் சாய்பாபா ஆரத்தி பாடல்களை பாடி பாபாவை வழிபட்டனர்.
பின்னர் மதியம் கோவிலுக்கு வந்திருந்த சுமார் 1000.க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.