இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்
எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜன், கிருஷ்ணசாமி வழங்கினர்.
எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளில் சுமார் 30 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினர்.
கடந்த 1ஆம் தேதி செங்குன்றம் அடுத்த பாடி நல்லூரில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 53 ஊராட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சக்திவேலு, மத்திய ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி,ஒன்றிய குழு துணைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு 53 ஊராட்சிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சுமார் 30 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஏவி.ராமமூர்த்தி தண்டலம் கிருஷ்ணமூர்த்தி வி.ஜே.சீனிவாசன், பொருளாளர் ரமேஷ் விபி.ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கேவி.லோகேஷ், டிகே.முனிவேல், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி டி.சங்கர்,சம்பத், கோடுவெளி குமார், மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் சீனிவாசன்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் குணசேகர் சிவாஜி, ஜமுனா அப்புன், ஒன்றிய நிர்வாகிகள் அவைத்தலைவர் பிஎன்.ரவிச்சந்திரன், கேஜி.அன்பு, ஆத்துப்பாக்கம் வேலு, பெற்றோர் ஆசிரியர் தலைவர் ஏழுமலை, வடிவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் உதயசங்கரன் நன்றி கூறினார்.