குரு பௌர்ணமி விழாவை முன்னிட்டு சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
பெரிய பாளையம் அருகே குரு பௌர்ணமி விழாவை முன்னிட்டு சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பெரியபாளையம் அருகே ராள்ளாபாடி கிராமத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி விழாவை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ராள்ளாபாடி கிராமத்தில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா திருக்கோவில். குரு பௌர்ணமி விழாவை முன்னிட்டு காலை 6.மணி அளவில் சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து6.30 மணி அளவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கரங்களால் மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்தனர். ஆலய வளாகத்தில் 7.மணி அளவில் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், ஸ்ரீ சாய் பாபா அருள் வேண்டி மகா சங்கல்பம், உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9 மணி அளவில் சத்ய நாராயண பூஜை நடைபெற்றது.மதியம் 12.மணி அளவில் யாகசாலையில் இருந்து கொண்டு வந்த கலசங்களில் உள்ள புனித நீரை சாய்பாபாவின் மீது ஊற்றி பின்னர் பாபாவிற்கு பால்,சந்தனம், பன்னீர், பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும், அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி பாடல்கள் நடைபெற்றது.பின்னர் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இவ்விழாவில் பெரியபாளையம், ஆரணி, தண்டலம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி உதயகுமார் தலைமையில் ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.